பொங்கல் பண்டிகையையொட்டிகரூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மாரியம்மன் புஷ்ப வியாபாரிகள் கமிஷன் மண்டியில் விற்பனைக்கு வந்த பூக்களின் விலை கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000க்கு விற்பனையாகிறது. முல்லை பூ ரூ.2000, ஜாதி பூ ரூ.1500, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.250,செவ்வந்திப் பூ ரூ.250,ரோஜாப்பூ ரூ.220,துளசி ஒரு கட்டு ரூ.60,மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.60 க்கும்
விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மார்கழி மாதத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளது. மேலும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடும் நிலையில் பூஜை பொருட்கள் வாங்க கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.