தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் பொங்கல் என்றாலே நாம் நினைவுக்கு வருவது பொங்கல், விவசாயம், காளைகள், இதனை விட இன்னும் மேலாக ஜல்லிக்கட்டு விழா நம்முடைய நினைவுக்கு வரும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பெண்களும் ஆர்வமுடன் ஜல்லிக்கட்டு விழாவினை கண்டு ரசிப்பது வழக்கம். இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் பொங்கல் விழா கழை கட்ட தொடங்கியுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 17 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது அதன்படி முதல் கட்டமாக திருச்சி மாவட்டத்திலேயே முதல் ஜல்லிக்கட்டாக வருகின்ற 16ம் தேதி மாட்டுப்பொங்கல் தினத்தன்று திரு வெறும்பூர் அருகே உள்ள சூரியூரிலும், 19ஆம் தேதி திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள நவலூர் , குட்டப்பட்டு பகுதியிலும், அதே 19ஆம் தேதி மணப்பாறையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் பொங்கல் விழா களை கட்ட தொடங்கியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி…
- by Authour
