பொங்கல் என்றாலே பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம், கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மிகவும் உற்சாகமாகவும் மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆட்டம் பாட்டத்துடனும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி முன்னிட்டு மாணவிகள், பள்ளி
மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வண்ணமிகு ஆடையில் கல்லூரிக்கு வருகை புரிந்து கல்லூரி வளாகத்தில் வண்ண கோலமிட்டு பிரம்மாண்ட பொங்கலிட்டு அதன் தொடர்ச்சியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளும், பள்ளி மாணவர்களும் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறப்புமிக்க பொங்கல் திருவிழாவின் ஏற்பாட்டை ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரியின் செயலர் நீலகண்ட பிரியா அம்பா மற்றும் கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர் பெருமக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.