Skip to content
Home » கோலாகலமாக தொடங்குகிறது சென்னை சங்கமம்… மேளம் வாசித்து மகிழ்ந்த எம்பி கனிமொழி…

கோலாகலமாக தொடங்குகிறது சென்னை சங்கமம்… மேளம் வாசித்து மகிழ்ந்த எம்பி கனிமொழி…

சென்னை தீவுத்திடல் அரங்கில் இன்று மாலை 6.00 மணிக்கு, 40 வகையான கலைகளுடன் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ துவக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து,சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு (14/01/2024 முதல் 17/01/2024 வரை) கலை விழாக்கள் நடைபெறவுள்ளது. சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளாவார்கள். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற

கிராமியக் கலைஞர்களின் ஒத்திகையை பார்வையிட்ட திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, கலைஞர்களின் மேளத்தை வாசித்து மகிழ்ந்தார். கலைஞர்களுடன் உரையாடியதும் அவர்களின் இசைக்கருவிகளை உரிமையுடன் வாங்கி வாசித்தது இசைக் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *