கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க படவில்லை என இப்பகுதி இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சரியான பதில் அளிக்கப்படாததால் தற்பொழுது அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் மறியலில் காலி குடங்களுடன் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் அடிக்கடி பொதுமக்களுக்கு சரியாக தண்ணீர் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் அவ்வப்போது சாலை மறியலில் ஈடுபட்டு, தங்களது பிரச்சனைக்கு தற்காலிக தீர்வுகளை மட்டுமே கண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தற்பொழுது பொள்ளாச்சி வால்பாறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மேலும் அங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் குடிதண்ணீர் வராமல் இருக்க அலட்சியப் போக்காக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.