அண்மையில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு பெரம்பலூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் துரை.சிவா ஐயப்பன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப்பேரணியானது காமராஜர் வளைவு,சங்குப்பேட்டை,ரோவர
வளைவு,வெங்கடேசபுரம் மற்றும் பாலக்கரை வழியாக வந்து புதிய பேருந்து நிலையத்தில் நிறைவுற்றபின் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் தேமுதிகவினர் மட்டுமின்றி அதிமுக நகர கழக செயலாளர் ராஜபூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் இரத்தினவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் வீர செங்கோலன்,விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் சிவக்குமார்,மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட தலைவர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..