நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று கரூர் மாநகரில் 2 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இன்று கேப்டன் மில்லர் படம் வெளியாகும் நிலையில், தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். திரைப்படம் வெளியான திரையரங்கில் காலை 10.30
மணி படக்காட்சிகள் திரையிடப்பட்டது.
படம் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடிய தனுஷ் ரசிகர்கள் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து மலர்தூவியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சரவெடிகள் மற்றும் செதில் தோங்காய் உடைத்தும் நடனமாடி தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.