ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் மற்றும் அனுமன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், ஐந்து ரோடு ரயில்வே காலனி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு பழங்கள் என 16 பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தென்முக ஆஞ்சநேயருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பின்னர்
ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது.
அதை தொடர்ந்து தென்முக ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஐந்து ரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தென்பகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா அபிஷேக நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.