மார்கழி மாத மூல நட்சத்திரத்தன்று ஹனுமன் ஜெயந்தி விழாவையொட்டி அரியலூர் கோதண்டராமர் கோவிலில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்கு பால், தயிர், மஞ்சள், திரவியப்பொடிகள், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 15 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து ஆஞ்சநேயருக்கு
அலங்காரம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிப்பட்டனர்..