லஞ்ச வாங்கிய குன்றத்தூர் நகராட்சி ஆணையர் குமாரி கைது செய்யப்பட்டுள்ளார். நிலம் வரன்முறைப்படுத்த ரூ. 24 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார். நகராட்சி ஆணையர் குமாரி, நகரமைப்பு அதிகாரி பாலசுப்பிரமணி, அலுவலக உதவியாளர் சாம்சன் ஆகிய 3 பேர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டம் மதலப்பட்டு விஏஓ பிரபாகரன் லஞ்சம் வாங்கிய போது கைது செய்துள்ளனர். பட்டா பெயர் மாறுதலுக்காக ரூபாய் 40,000 லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார். கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.