தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரியமிக்க விழாவான பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் 14 துறைகள் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை நடத்தின.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார்.தேர்வு நெறியாளர் மலர்விழி. நிதியாளர் ராஜாராமன்.கல்லூரி கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன். தமிழ்நாடு ஆசிரியர் கழக இணை தலைவர் சுகுமாரன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொங்கலின் தனிச்சிறப்புகள் குறித்து தமிழ் துறை உதவி பேராசிரியர் தமிழடியான் சிறப்புரை ஆற்றினார்.
தஞ்சை ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் திருமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு காளை
மற்றும் கிராம முறைப்படி வயல் உழவுக்கு தேவைப்படும் டிராக்டர் ஆகியவற்றை காட்சிப்படுத்தி சிறப்பு செய்தார்.
விழாவை முன்னிட்டு 14 துறைகளையும் சேர்ந்த மாணவிகள் பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து வந்து பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்டு உற்சாகத்துடன் சமத்துவ பொங்கல் கொண்டாடினர். முன்னதாக மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கரகாட்டம் பளுதூக்குதல் ஒயிலாட்டம் ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் மாணவிகளாக இருந்து தற்போது கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுபவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன விழாவையொட்டி ஒளிபரப்பப்பட்ட திரைப்பட பாடல்களுக்கு மாணவிகளின் உற்சாக நடனம் களைகட்டியது.நிகழ்ச்சியை மாணவிகள் பேரவை தலைவர் தனியா. துணைத்தலைவர் சோனா அகல்யா. செயலாளர் ரமா. மற்றும் மாணவிகள் செய்திருந்தனர். நிறைவாக தமிழ் துறை உதவி பேராசிரியர் கரிகாலன் நன்றி கூறினார்