அரியலூர் மாவட்டத்தில் மதுபானம் மற்றும் கள்ளச்சாரயம் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் மதுபானம் மற்றும் கள்ளசாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்து, துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், உதவி ஆணையர் (கலால்) மனோகரன், வட்டாட்சியர் (கோட்ட கலால்) திருமாறன், வட்டாட்சியர் அரியலூர் ஆனந்தவேல், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.