தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை யில்
பொங்கல் பரிசாக ரொக்கம் ரூபாய் 1000/-மற்றும் பொங்கல் தொகுப்பு,வேட்டி,சேலைகளை களை வழங்கியதை
தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி சந்தைப்பேட்டையில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக அமுதம் அங்காடியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000/-, மற்றும்
பொங்கல் தொகுப்பு , வேட்டி,சேலைகளை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.முருகேசன், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டலமேலாளர் சீத்தாராமன்,
திருவரங்குளம்சேர்மன் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சி தலைவர் மு.ராசிமுருகானந்தம், துணை ப்பதிவாளர் ராஜவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.