மயிலாடுதுறையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 510 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 52 இலட்சத்து, 2 ஆயிரத்து 973 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் தங்கத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். மாவட்ட
ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்டிஓ யுரேகா, எம்.பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.