புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.மரவப்பட்டி எம்எஸ்எம். முத்துராமன் ரோட்டரி ஹாலில் நடந்த விழாவிற்கு ரோட்டரி சங்க தலைவர் கேஎல்.கேஏ.ராஜாமுகமது தலைமை வகித்தார்.செயலாளர் எஸ்.அருள்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.ரோட்டரி திட்ட இயக்குனர் எம்பி.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். ரோட்டேரியன் பொறியாளர் என்.கனகராஜன், அனைத்து ரோட்டரி உறுப்பினர்களும் பங்கேற்றனர். சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு சர்க்கரை பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. உறுப்பினர்களிடையே விளைய்ட்டு போட்டிகள்,கோலப்போட்டிகள் நடந்தது.பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக சங்கபொருளாளர் ஏபி.அருண் நன்றி கூறினார்.