தமிழ் மக்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. சென்னையில் இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
புதுக்கோட்டை காமராஜபுரம் 10ம் வீதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மெர்சி ரம்யா, வை. முத்துராஜா எம்.எல்.ஏ., வழக்கறிஞர் செல்ல பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத்,
புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி, மாவட்ட வழங்கல் அதிகாரி கு. சாந்தி, நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் தனலெட்சுமி , நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சீதாராமன் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல திருமயம் வேளாண்மை விற்பனை கூட்டுறவு விற்பனை சங்கத்திலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியிலும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.