Skip to content
Home » ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Senthil

தமிழக மக்கள் அனைவரும் 2024 பொங்கல் பண்டிகை யை சிறப்பாக கொண்டாடும் வகையில்  நியாய விலை கடைகளில்  அரிசி பெறும் அனைவருக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பங்களுக்கும்  பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை, ரூபாய் 1000 ரொக்கம்  மற்றும் முழு கரும்பு ஆகியவற்றை வழங்க  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டார். அதன்படி இந்த திட்டத்தை இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இன்று அமைச்சர்கள்,  கலெக்டர்கள் இந்த திட்டத்தை ஆங்காங்கே தொடங்கி வைத்தனர்.  2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402  குடும்பத்தினர் பயன்பெறுகிறார்கள். இவர்களுக்கு238கோடியே 92 லட்சத்து 72ஆயிரத்து 741 ரூபாய்  மதிப்பில் இவை வழங்கப்படுகிறது.   அடுத்தடுத்து  ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் கடுமையான நிதி  நெருக்கடி உருவான சூழலிலும்  பொங்கல் பரிசு வழங்கிய முதல்வரை ஒட்டு மொத்த தமிழக மக்களும் பாராட்டி வருகிறார்கள்.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும்  ரூ.1000 ரொக்கத்தை பெற்றுக்கொண்ட மக்கள்,  தாய் வீட்டு சீராக பொங்கல் பரிசு தந்த முதல்வர் ஸ்டாலின் நல்லாயிருக்கணுமுன்னு வாழ்த்தினர். இதுபோல கரும்பை  விவசாயிகளிடமே நேரடியாக சென்று அதிகபட்சமாக ரூ.33 வரை விலைகொடுத்து வாங்கும்படி அரசு உத்தரவிட்டதால், விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைத்ததாகவும், கரும்பு விற்பனை நன்றாக இருந்ததாகவும் தமிழக அரசுக்கு  விவசாயிகள் நன்றி தெரிவித்து வருகிறார்கள். கடுமையான நிதி நெருக்கடியிலும் இந்த பொங்கல் பரிசு வழங்கிய முதல்வரை மக்கள் பாராட்டினர்.

திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன்கோயில் அருகில் உள்ள நியாய விலைக் கடையில்  நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு  இன்று காலை  1000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  கலெக்டர் பிரதீப் குமார், எம்.எல்.ஏக்கள்  பழனியாண்டி,  கதிரவன், மாவட்ட நகர்
ஊரமைப்புக் குழு உறுப்பினர் .க.வைரமணி,  கூட்டுறவுத்துறை  இணைப்பதிவாளர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர் கலைச்செல்வி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கரூர்

மாவட்டத்தில் 3,31.582 குடும்ப அட்டைதாரர்கள், மாவட்டத்தில் செயல்படும் 388 முழு நேர நியாய விலைக் கடைகள் மற்றும் 22 பகுதி நேர நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூர் ராயனூர் ஆச்சி மங்கலம் ரேசன்கடையில் கலெக்டர் தங்கவேல் பொங்கல் பரிசு வழங்கி துவக்கி வைத்தார். இந்த பொங்கல் வரிசை  14ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!