கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், தண்டேஸ்வரநல்லூர் பத்மாவதி நகரில் வசிக்கும் மாதவன் மகன் பிரபு வயது 25/24 என்பவர் பல திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 02.12.2023-ந் தேதி பிரபு-ம் அவரின் கூட்டாளிகளும் சேர்ந்து ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆமணக்கந்தோண்டி பொன்னேரி கரையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதற்கான ஆயத்தத்தில் இருந்தபோது, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு,கைது செய்யப்பட்ட பிரபு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் பிரபு வெளியே வந்தால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபடுவார் என்பதால்,அவர் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் N.ராமராஜன் கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லாவின் மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் பிரபுவை அடைக்க ஆணை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் பிரபு குண்டர் தடுப்பு சட்டத்தின் ப6டி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.