Skip to content
Home » பஸ் ஸ்டிரைக்…. மயிலாடுதுறை,அரியலூர், கரூரில் பாதிப்பில்லை…… டெல்டா நிலவரம் என்ன?

பஸ் ஸ்டிரைக்…. மயிலாடுதுறை,அரியலூர், கரூரில் பாதிப்பில்லை…… டெல்டா நிலவரம் என்ன?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கரூர் மண்டலத்தில் உள்ள கரூர்- 1 ,கரூர்-2, குளித்தலை, அரவக்குறிச்சி, ஈரோடு ஆகிய பணிமனைகளில் உள்ள சுமார் 279 பேருந்துகளில் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக  34 தற்காலிக டிரைவர்கள், நடத்துனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.  இதன் மூலம் அனைத்து நகரங்களுக்கும் பஸ்கள் வழக்கம் போல இயக்கப்படுகிறது.

நாகப்பட்டினம் மண்டலத்திற்குட்பட்ட 11 பணிமனைகளில் 80 சதவீத பேருந்துகள்இயக்கப்பட்டு வருகின்றன
நாகப்பட்டினம் ,காரைக்கால், , மயிலாடுதுறை, , சிதம்பரம் வேதாரண்யம், , நன்னிலம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட 11 பணிமனைகளில் 405 பேருந்துகள் இயக்கப்படுகிறது
பணிக்கு வர வேண்டிய
ஓட்டுனர்கள் 548 பேரில் 406 பேர் பணிக்கு வந்தனர்.  நடத்துநர் 548 பேரில்  407 பேர்  பணிக்கு வந்தனர்.
கூடுதலாக 140 தற்காலிக ஓட்டுனர்கள், 30 தற்காலிக நடத்துனர்கள் நியமித்து
மண்டலத்தில் 80% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் இருந்து 42 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.  மற்ற இடங்களில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டது. இதனால்  பள்ளி கல்லூரிகளுக்கு மற்றும் வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு  உள்ளானார்கள்.

மயிலாடுதுறை மாவட்ட அரசு போக்குவரத்துப் பணிமனைகளான மயிலாடுதுறையில் 70, சீர்காழியில் 41, பொறையாரில் 26 என அனைத்து டெப்போக்களிலும் உள்ள 137 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
3 பணிமனைகளிலும் புதிதாக தற்காலிக பணியாளர்களாக 28 ஓட்டுனர்களும் 4 நடத்துனர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதே போல திருவாரூர், தஞ்சை  மாவட்டங்களில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.   கிராமப்புறங்களில் அதிக அளவு  பஸ்கள் இயக்கப்படவில்லை.  அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில்  வழக்கம் போல பஸ்கள்  செல்கிறது.  பெரம்பலூரில் காலையில் மட்டும்  பஸ்கள் தாமதமாக வந்தது. பின்னர்  போதுமான அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.  திருச்சி மாவட்டத்தில் கிராமங்களுக்கு செல்லும் பஸ்களும்,  டவுன் பஸ்களும் பெருமளவு இயக்கப்படவில்லை. அந்த டிரைவர், கண்டக்டர்கள் முக்கிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க மாற்றிவிடப்பட்டு உள்ளனர். அத்துடன் தற்காலிய ஊழியர்களைக்கொண்டும்  பஸ்களை இயக்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *