சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் சமீபத்தில் தந்தி டிவியில் அளித்த பேட்டி ஒன்றில் மோடிக்கு நிகரான தலைவரா ராகுல் காந்தி என்கிற கேள்விக்கு காங்கிரசில் அப்படி யாரும் இருக்குறத மாதிரி தெரியவில்லை.. பதில் அளித்திருந்தார். அதே போல் மற்றொரு கேள்விக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்தவிதமான முறைகேடு செய்வதற்கும் வாய்ப்புகளும் இல்லை என கூறியிருந்தார்.. இந்த பதில்கள் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாடு இருப்பதாக கூறி தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு எம்பி கார்த்திக் சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. நாளை(ஜன 10) காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராக வேண்டும் என அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Tags:காங்கிரஸ் நோட்டீஸ்