தென்னக ரயில்வே முதன்மை பொறியாளர்(பாலம்)அறிவுறுத்தலின்படி, பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது மற்றும் சில ரயில் சேவைகளின் முறையில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன:
அதன்படி பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்:
ரயில் எண். 16849 திருச்சி – ராமேஸ்வரம் முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ், திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் ரயில், மறு அறிவிப்பு வரும் வரை ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது (திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வரை மட்டுமே செல்லும்)
மறு மார்க்கத்தில் ரயில் எண்.16850 ராமேஸ்வரம் – திருச்சி முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ், ராமநாதபுரத்தில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் நேரப்படி பயணத்தைத் தொடங்கும்.