குட முருட்டி, வெட்டாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் நெய்வேலி காட்டா மணக்கு, சீமை கருவேலம், நாணல்கள் மண்டி நீரின் போக்கைத் தடுக்கின்றன. இதனால் வாய்க்கால் பாசனம் என்பது அரிதாகி விட்டது. சீமை கருவேலம் சுற்றுச் சூழலுக்கு கேடு மட்டுமல்ல, நிலத்தடி நீரையும் உறிஞ்சக் கூடியது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருக்கருக்காவூர் வெட்டாற்றில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நாணல்கள், சீமை கருவேல மரங்கள் மண்டியுள்ளன. ஆங்காங்கே மேடிட்டு நீரின் போக்கைத் தடுக்கின்றன. கரைகளில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து நீரை உறிஞ்சுகின்றன. ஆற்றில் நீர் செல்லும் பாதை குறுகி வருகிறது. அரசு இதில் உரிய கவனம் செலுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்.. பல
கிலோ மீட்டர் தூரம் நாணல்கள், சீமை கருவேலம், நெய்வேலி காட்டா மணக்கு மண்டி நீரின் போக்கை தடுக்கின்றன. இதில் ஆங்காங்கே மேடிட்டு உள்ளது. இதனால் வாய்க்கால் பாசனமே அற்று விட்டது. இந்த ஆற்றைத் தூர் வாரி இருபது வருடத்திற்கு மேல் இருக்கும். ஆட்சியில் இருப்பவர்களால் ஆற்றை, ஏரியை, வாய்காலை, கண் மாயை உருவாக்கத் தான் முடியாது. ஆனால் இருப்பதை முறையாக பராமரித்தாலே போதும். சென்னையில், தென் மாவட்டங்களில் வெள்ள சேதத்திற்கு ஆறுகள் பராமரிப்பில்லாததே காரணம். திராவிட மாடல் அரசு இனியாவது நீர் நிலைகளில் கவனம் செலுத்தட்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.