தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மணல் குவாரி, குத்தகைதாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனை நிறைவடைந்த பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.