Skip to content
Home » திருச்சி என்.ஐ.டி-யில் பெண்களின் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான 5 நாள் பயிலரங்கம்…

திருச்சி என்.ஐ.டி-யில் பெண்களின் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான 5 நாள் பயிலரங்கம்…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி கல்லூரியில் பெண்களின் பொருளாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான ஐந்து நாள் பயிலரங்கம்  துவங்கியது.

பெண்களின் பொருளாதாரத்தை பெருக்குவதற்காகவும் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காகவும் என் ஐ டி கல்லூரி வளாகத்தில் ஐந்து நாள் நடக்கும் பயிலரங்கத்திற்கு என்ஐடி இயக்குனர் அகிலா தலைமை வகித்தார்.

இந்த பயிலரங்கு பெண்கள் வணிகம், பேக்கிங், சந்தைப்படுத்துவது, பாதுகாப்பு மற்றும் சான்றிதலுடன்

மேம்படுத்தல் என்ற தலைப்பில் பேசப்பட்டது.

டிஜிட்டல் கல்வி அறிவு மூலம் பெண்களின் நிலையான வாழ்வாதாரத்தையும், பொருளாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான பல்துறை போர்ட்டபிள் கட்டமைப்பு திட்டத்துடன் சீரமைக்கப்பட்டு டிஎஸ்டி சீட் மூலம் நிதி அளிக்கப்பட்டது.

மேலும் திருமதி கார்ட் மொபைல் பயன்பாட்டில் புதிய பதிப்பின் வளர்ச்சியின் போது வழங்குவதே முதன்மை நோக்கமாகவும் சுய உதவி குழுக்கள் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கு இந்த பயிற்சி மூலம் ஈ காமர்ஸ் மொபைல் அப்ளிகேஷன் மூலம் தங்களது தயாரிப்புகளை திறம்பட விளம்பரப்படுத்த உதவுகிறது.

 

இதன் மூலம் சுய விளம்பரம்,

பெண்கள் அதிகாரம் அளித்தல் மற்றும் டிஜிட்டல் கல்வி அறிவை வளர்ப்பது மூலம் பொருட்களை விற்கவும், சந்தை படுத்தவும் உத்திகளை மேம்படுத்தும் நோக்கமாக கொல்லப்பட்டது.

 

இதில் உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு, அதிநவீன உணவு, பரிசோதனை ஆய்வகத்தின் பின்னணி, தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகாரம் பெற்றது, உணவு பொருள்களில் உள்ள இயற்பியல், வேதியல் பண்புகள் கலவை மற்றும் அமைப்பு பகுப்பாய்வு ஆகியவற்றை அதிநவீன உபகரணங்களுடன் தங்களது அனுபவங்களை தெரிவிப்பார்கள்.

 

மேலும் இந்த கருத்தரங்கில் மொத்த பொருட்கள் கொள்முதல், ஜிஎஸ்டி, எஃப் எஸ் எஸ் ஏ ஐ சான்றிதழ் பதிவுகள், எம் எஸ் எம் இ பதிவு செயல்முறையின் நுணுக்கங்கள் ஆகியவற்றை நடைமுறைகளை எடுத்துக் கொள்கிறது.

 

 

மகளிர் சுய உதவி குழுக்கள் அவர்களது தயாரிப்புகளை என் ஐ டி வளாகத்தில் காட்சிப்படுத்தவும் சந்தை படுத்தவும் ஸ்டால்கள் அமைக்கப்பட்டன. இதனை திருச்சி மகளிர் மேம்பாட்டு திட்ட இயக்குனர் ரமேஷ் குமார்  தொடங்கி வைத்தார்

 

 

இதில் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் பலரும் கலந்து சொந்த தயாரிப்புகள் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக ஸ்டால்கள் அமைத்திருந்தனர் இதில் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியர் டாக்டர் சிவகுமரன், பேராசிரியர் டாக்டர் பிருந்தா உள்ளிட்ட மகளிர் குழுவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!