அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகள் விசாரணை பிப்ரவாி 5ம் தேதி முதல் தொடங்கும். தினம் இந்த வழக்கு விசாரணை நடைபெறும். ஒவ்வொரு நாளும் எந்த அமைச்சர், முன்னாள் அமைச்சரின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையால் மற்ற வழக்குகளின் விசாரணை தாமதமாகக்கூடாது என்பதற்காக இதனை அறிவிப்பதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அமைச்சர் ஐ பெரியசாமி வழக்கு பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் விசாரணை நடைபெறும்.
எனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை வரும் 30ம் தேதிக்குள் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஐகோர்ட் அறிவித்துள்ளது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி ஆகியோர் மீதான வழக்குகளும் இதில் அடங்கும்.