ம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
பொங்கலுக்கு பின்னர் கோரிக்கைகள் குறித்து பேசலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியும் அதை தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை. இது தொடர்பாக 2 முறை பேச்சுவார்த்தை நடந்தும் தோல்வியில் முடிந்தது. எனவே இன்று அமைச்சர் சிவசங்கர் இறுதிகட்டமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையகரத்தில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தையை தொடங்கினார். இதில் தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன் அமைச்சர் சிவசங்கர், நிதித்துறை செயலாளர் உதயசந்திரனுடன் ஆலோசனை நடத்திவிட்டு வந்தார். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லை. எங்களது 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை. பொங்கலுக்கு பின்னர் பேசிக்கொள்ளலாம் என்றனர்.எனவே நாளை திட்டமிட்டபடி பஸ் ஸ்டிைரைக் நடைபெறும் என சிஐடியூ தொழிற்சங்க தலைவர் சவுந்தர்ராஜன் அறிவித்தார்.