அசாம் மாநிலம் உடல்குரி அருகே ராங்க்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிஸ்வாந்த் முர்மோ(54). இவரது மகன் சுபோல்முர்மோ(32) , அசாம் மாநிலம் பாக்ஷா மாவட்டம் தமுல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலோ ராம்கவல்(50). இவரது மனைவி சின்தோமணிபோரோ(44) இவர்கள் மற்றும் பலர்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மூலிமங்கலம், டிஎன்பிஎல் சிமென்ட் ஆலைக்கு செல்லும் சாலையில் பெட்ரோல் நிலையம் அருகில் உள்ள மரப்பட்டைகளை பவுடர் செய்யும் மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். .இந்நிலையில் அங்கு வேலை பார்த்து வந்த சின்தோமணிபோரோ என்பவருக்கும்,சுபோல்முர்மோவுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாலிபர் சுபோல்முர்மோவை, சின்தோமணிபோரோ தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுபோல்முர்மோ நான் ஊருக்கு செல்வதாக கூறியதாகவும்,அதற்கு அந்த பெண் சின்தோமணிபோரோ என்னை கொன்று விட்டு செல்லுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண் உட்பட அனைவரும் சுமார் 10 மணி அளவில் மது அருந்திக் கொண்டிருந்தனர் . அப்போது அந்த பெண்ணுக்கும் அந்த வாலிபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது . அப்போது அந்த வாலிபர் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது ஊருக்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார்.அந்த பெண் என்னை திருமணம் செய்து கொள் இல்லையேல் என்னை கொன்று விட்டு ஊருக்கு போ என்று கூறியுள்ளார் .அப்போது மது போதையில் இருந்த அந்த வாலிபர் சுபோல்முர்மோ அந்த பெண்ணை குரல்வளையை பிடித்து நசுக்கி உள்ளார். இதில் அந்த பெண் மயங்கி கீழே விழுந்துள்ளது .அது பார்த்த இரண்டு மகன்களும் கதறி அழுதனர். குரல் வளையை பிடித்து நசுக்கியதில் அந்தப் பெண் இறந்து விட்டார்.இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்தப் பெண்ணை குரல்களை நசுக்கி கொன்ற சுபோல் முர்மோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.