கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சிஐடியு சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (OHT) இயக்குபவர்களை பணிநிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிடுட வலியுறுத்தியும்,
தூய்மைக் காவலர்களுக்கு மாத ஊதியம் ரூ.10,000/- மாக உயர்த்தி ஊராட்சி நிதியிலிருந்து வழங்கவும், காப்பீடு திட்டத்தில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கவும், மூன்று ஆண்டுகள் பணிமுடித்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் சிறப்பு காலமுறை ஊதியதாரர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணை 129-ஐ அமலாக்க நடவடிக்கை எடுக்கவும்,
DBC (டெங்கு மற்றும் கொசுப்புழுக்கள் ஒழிப்பு) ஊழியர்களுக்கு தொடர் பணி வழங்கவும், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26,000 வழங்கவும் நடவடிக்கை எடுக்க வழியுருத்தியும்
பணி ஓய்வு பெற்ற OHT ஆப்ரேட்டர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கவும்,பணிக்காலத்தில் இறந்த OHT ஆப்ரேட்டர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் குடும்பத்திற்கு காப்பீட்டுத்தொகை துரிதமாக கிடைக்க நடவடிக்கை எடுத்திடுக என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-க்கு மேற்ப்பட்டோர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.