திருச்சி மாவட்டம், சிறுதையூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் 45 வயதான அம்புரோஸ்.அதேபோல் லால்குடி பூவாளூர் சாலையில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் 55 வயதான கென்னடி. இவர் சிறுதையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வருவாய் சான்றிதழுக்கு விண்ணப்பி்திருந்தார். கென்னடியின் மாத வருமானம் எவ்வளவு என விசாரித்த கிராம நிர்வாக அலுவலர் வருமானத்தை குறிப்பிட்டு சான்றிதழ் தயார் செய்தார்.அதற்கான சான்றிதழை கென்னடி பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிராம நிர்வாக அலுவலர் அம்புரோஸ் அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளிவந்தார். அப்போது அங்கு வந்த கென்னடி வருவாய் சான்றிதழில் அதிக தொகை எப்படி குறிப்பிடலாம் என கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கிராம நிர்வாக அலுவலர் லால்குடி அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கென்னடி கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.