திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இருபதாவது ரயில்வே சாரணிய பெருந்திரள் திரளணி நடந்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரண சாரணியர்கள் பங்கேற்று உள்ளனர். முசிறி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்கவுட் அமைப்பின் செயலாளர் செயலர் ஜெயமூர்த்தி, பயிற்சி ஆணையர் சலீம், அமைப்பு ஆணையர்கள் திருமலை, நாகராஜன் மற்றும் பல சாரணிய ஆசிரியர்கள் இந்த முகாமுக்கு வந்திருந்தனர். அவர்கள் சாரணியர்கள் அமைத்திருந்த கூடாரங்கள் மற்றும் கலைப் படைப்புகளை பாராட்டினர். இந்த முகாம் நாளை நிறைவு பெறுகிறது. இதில் ரயில்வே உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
திருச்சியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு…..சாரணிய பெருந்திரள் திரளணி…. நாளை நிறைவு விழா
- by Authour