கிருஷ்ணகிரியில் இன்று நிருபர்களிடம் முன்னாள் முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது.. சட்ட விதிகளை மதிக்காமல் காலடியில் போட்டு மிதிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் தான், அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அடிப்படை உறுப்பினராக இருப்பவர் கூட பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடலாம் என எம்.ஜி.ஆர் சட்டம் வகுத்தார். ஆனால் தற்போது சாதாரண தொண்டர்கள் போட்டியிட முடியாத வகையில், 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தேவை என சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் வசதி படைத்தவர்கள் தான் பதவிக்கு வர முடியும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் போராட்டம் தொடரும். எந்த காலத்திலும் தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என தெரிவித்தார்.