நாகை மாவட்டம் கீழ்வேளூர் தனியார் கல்லூரியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம், வீரத்தமிழன் சிலம்பம் கலைக்கூடம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் 5-6, 7-8, 9-10 வயது என மூன்று பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 500க்கு மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள்(மாணவர்கள்) கலந்து கொண்டனர். தனித் திறன் மற்றும் தொடு முறை உள்ளிட்ட போட்டிகள் நடுவர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பை, மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது.