Skip to content
Home » கனமழை காரணமாக 28 கிராம மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை…

கனமழை காரணமாக 28 கிராம மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில்  கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8மணிவரை மாவட்டத்தின் கடலோர பகுதிகளான  கொள்ளிடம் 33 மி.மீ., சீர்காழி 68.8 மி.மீ.,   தரங்கம்பாடி 53 மி.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது.  கனமழை மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 28 கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 400 விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடி துறைமுகங்கள், ஆறுகள் மற்றும் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *