கோயம்புத்தூர் வ.உ.சி பூங்கா உரிமம் ரத்து செய்யப்பட்டதை தொடந்து அங்கு இருந்து உயிரினங்கள் மற்ற பூங்காவுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
மத்திய வன பாதுகாப்பு ஆணையம் போதிய இடவசதி இல்லை என கூறி கோவை வ.உ.சி பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது. இதனை
அடுத்து கடந்த நவம்பர் மாதம் வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருந்து பெலிக்கான், குரங்குகள், பாம்புகள் மற்றும் முதலைகள் உள்ளிட்ட உயிரினங்களை வண்டலூர் மற்றும் வேலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதில் சில பாம்புகள் சிறுவாணி வனப் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று அந்த பாம்புகளை கிரீன் கேர் அமைப்பின் பாம்பு பிடி வீரரான ஸ்நேக் அமீன் பத்திரமாக பிடித்துக் கொண்டு போய் சிறுவாணி அடர்ந்த வனப் பகுதிக்குள் வனத்துறையினருடன் சென்று விடுவித்தார்.