திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கில்பர்ட் டேனியல். இவரது மனைவி பாட்ரிசியா செலஸ். இருவரும்வெளிநாடு செல்ல குடந்தை மேல காவிரியை சேர்ந்த காஜா மொய்தீன் (வயது 45) என்பவரிடம் அணுகினர். இவர்களிடம் காஜாமொய்தீன் ஆசை வார்த்தை கூறி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி
ரூ 11 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு காஜா மொய்தீன் ஏமாற்றி வந்ததாக தெரிய வருகிறது. இது குறித்து ஜெ.எம் .4 நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் காஜா மொய்தீன் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய திருச்சி பாலக்கரை போலீசாருக்கு உத்தரவுவிட்டனர்.இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் காஜா மொய்தீன் மீது மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.