Skip to content
Home » பெரம்பலூர் அருகே டூவீலரில் சந்தன கட்டைகளை கடத்தியவர் கைது

பெரம்பலூர் அருகே டூவீலரில் சந்தன கட்டைகளை கடத்தியவர் கைது

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் அரும்பாவூர் சிறப்பு உதவியாளர் கீதா மற்றும் அவரது குழுவினர் உடும்பியம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் மூட்டையை வைத்துக்கொண்டு வேகமாகவும் சந்தேகத்திற்கிடமாகவும் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த உதவி ஆய்வாளர் மேற்படி நபர் கொண்டு வந்த மூட்டையை சோதனை செய்தபோது அதில் அவர் சந்தனக் கட்டைகளை கடத்தி வந்தது தெரிய வந்தது.

மேற்படி நபரை விசாரணை செய்ததில் அவர் கோவிந்தராஜ் (32) மோகன் த/பெ செங்கையம்மன் கோவில் தெரு, கோட்டை, ஆத்தூர் வட்டம், சேலம் மாவட்டம் என்பது தெரிய வர மேற்படி நபரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 1.5 Kg  எடையுள்ள சுமார் 5000/- ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய TN 77 C 3341 (TVS Sport) இரு சக்கரவாகனத்தையும் பறிமுதல் செய்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின் படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் A.பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி அரும்பாவூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலா (பொறுப்பு)  எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *