சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை சென்றைடைந்தாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப். 2-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
இந்த விண்கலத்தை பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) எனும் எல்-1 புள்ளிக்கு மிக அருகே நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 127 நாட்களாக பல்வேறு கட்டங்களை கடந்து, சூரியனை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வரும் ஆதித்யா விண்கலம், இன்று மாலை எல்-1 புள்ளிக்கு அருகே நிறுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.
எல்-1 புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய ஒளி வட்டப் பாதையில் (Halo Orbit) இன்று மாலை 4 மணியளவில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட ‘ஆதித்யா எல்1’ விண்கலம் எல்-1 சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது, அதாவது, எல்-1 புள்ளியை சென்றைடைந்தாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியை அடைந்து ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன்படி, ஆதித்யா விண்கலம் 15 லட்சம் கிமீ தொலைவிலுள்ள எல்-1 புள்ளியை தற்போது சென்றடைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஹாலோ சுற்றுப்பாதையில் சுற்றியபடி, சூரியன் குறித்து ஆதித்யா விண்கலம் ஆய்வை மேற்கொள்ளும். எனவே, சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியை அடைந்து, ஆதித்யா எல்-1 விண்கலம் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.