திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் இருந்து சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகள் மதுரை சென்றனர். அங்கு விவாயிகளுக்கு தானியங்கள்,சிறு தானியங்கள்,காய்கறிகள், அறுவடை செய்த பின்பு பதப்படுத்துதல்,மதிப்பு கூட்டுதல் , அறுவடை செய்யும் முறைகள்,காய்கறிகள் வத்தல்,பிஸ்கட்,முருங்கை இலை பொடி,சோயா சாக்லேட் , அப்பளம்,போன்ற பொருட்கள் மதிப்பு கூட்டி தயார் செய்தல் பற்றி பேராசிரியர் திருமதி. ஜோதி லட்சுமி விரிவாக விளக்கி கூறினார்கள். இரண்டு நாட்கள் நடைபெற்ற
கண்டுணர்வு சுற்றுலாவில் கோமாகுடி, திண்ணியம்,நகர், பூவாளூர், ஆலங்குடிமகாஜனம், கபிரியேல் புரம்,மருதூர்,தச்சங்குறிச்சி,கிராமத்தில் இருந்து 50 மேற்பட்ட பல முன்னாடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் .முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரிசெல்வன் நன்றி கூறினார்.இந்த கண்டுணர்வு சுற்றுலா ஏற்பாட்டினை லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் ,வேளாண்மை உதவி அலுவலர்கள்,வேளாண்மை உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக்,தமிழ்மணி ஆகியோர் செய்திருந்தனர்.