பேருந்து நிலையம் அருகே கள்ளசந்தையில் மது அருந்திவிட்டு சாலையின் நடுவில் படுத்திருந்த மதுபிரியர்- காவல்துறையை குற்றம்சாட்டி புலம்பல்
அரியலூர் பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த மதுபான கடை அருகே காலைமுதலே கள்ள சந்தையில் மதுவிற்பனை செய்யபடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இன்று கள்ளசந்தையில் மதுஅருந்தி விட்டு மதுபிரியர் ஒருவர் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே படுத்து இருந்தார். இதனைகண்ட போலீசார் தண்ணீரை தெளித்து எழுப்பி, பின்னர் குடிக்க
தண்ணீர் கொடுத்து நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மரத்தடியில் ஓரமாக படுக்க வைத்தனர். அப்போது காவல்துறையினர் தான் கமிஷன் வாங்கிகொண்டு சரக்கு விற்க அனுமதிப்பதாக போலீசாரிடமே புலம்பினார். மேலும் என்ன சரக்கு வேணும் நான் வாங்கி தருகிறேன் என புலம்பியபடியே படுத்திருந்தது குறிப்பிடதக்கது.