ஆனைமலை புலிகள் காப்பகம் தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்கான பழங்குடி மக்களை எல்லாம் ஒன்று திரட்டி தொடர்ந்து அறவழியில் போராடி நில உரிமை பெற்று தந்தவர் ராஜலட்சுமி. தனது கல்லார் குடிதெப்பக்குளம் மேடு கிராமத்தை இந்தியாவில் மிக சிறந்த முன்மாதிரி கிராமமாக மாற்றியுள்ளார். அவருடைய செயலுக்கு பக்கபலமாக இருந்து வழி காட்டியவர் இவரது கணவர் ஜெயபால்,இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன,இவர்களது அகிம்சை வழி போராட்டம் வெற்றி பெற அவர்கள் வணங்கும் மாரியம்மனுக்கு இரண்டு பானைகளில் தாங்கள் வசிக்கும் மண் எடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இவர்களது செயலை பாராட்டு விதமாக இருவரும் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மிக மிக முக்கியஸ்தர் (VVIP) பிரிவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜலட்சுமி கூறுகையில் ….. எங்கள் கிராமத்துக்கு மக்கள் வசிக்கும் விதமாக இடம் கேட்டு தர்ணா,உண்ணாவிரதம் என பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று எங்களுக்கு தேவையான 12 ஏக்கர் நிலத்தை மகாத்மா காந்தி வழியில் அகிம்சை வழியில் போராடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் குடியரசுத் தலைவருக்கு மலைவாழ் மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்தார்.
கணவர் ஜெயபால் கூறுகையில்…. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு வன உரிமை கேட்டு எங்கள் பகுதி மக்களுக்கு இடம் கேட்டு மாவட்ட ஆட்சியர், பொள்ளாச்சி சார் ஆட்சியர்,தாசில்தார் என அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை 2021 ஆம் வருடம் வரை மூன்று வருடங்கள் அகிம்சை வழியில் போராடி எனது மனைவிக்கு பக்கபலமாக இருந்து இடத்தை மீட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.
உறவினர் அனீஸ் குமார் கூறுகையில்… கல்லக்குடி செட்டில் மண்ணில் பகுதியில் 25 குடும்பங்கள் வசித்து வருகிறது, மழைக்காலங்களில்மண் சரிவு ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வந்தோம்,தமிழக முதல்வர்
ஸ்டாலின் ஐயாவிற்கு எங்களது போராட்டம் தெரிந்தவுடன் மாவட்ட ஆட்சியர் மூலம் எங்கள் போராட்டத்திற்கு இடம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. குறிப்பாக ராஜலட்சுமி ஜெயபால் ஜனாதிபதி அவர்கள் கௌரவப்படுத்துவது எங்கள் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.
ராஜலட்சுமி மகன் தீபக் கூறுகையில்…. தங்களது பெற்றோர் படிக்கவில்லை ,மழைக்காலங்களில் மண்சரிவு மழை வெள்ளம் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தோம் போராட்டத்திற்கு அகிம்சை வழியில் வெற்றி பெற்று தனது பெற்றோர் ஜனாதிபதி சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார். விமானம் மூலம் இம்மாதம் 22 ம் தேதி டெல்லி செல்லும் இவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிப்ரவரி 2 ம் தேதி தமிழ்நாடு திரும்புகின்றனர்.
காடர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இதனால் ஆனைமலைத்தொடர் பழங்குடி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.