கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மூன்று மாணவிகள் நேற்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு 3 மாணவிகளும் செல்லவில்லை.. மூன்று மாணவியின் பள்ளிக்கு வராததால் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்,தொடர்ந்து பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் இடங்களில் தேடியுள்ளனர்.
நீண்ட நேரம் தேடியும் மாணவிகள் கிடைக்காத காரணத்தால், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படை போலீசார் விசாரணைமேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் பேருந்து மூலம் மாணவிகள் பயணம் தெரிய வந்துள்ளது தற்போது அந்த மூன்று சிறுமிகளும் கரூர் ரயில் ஸ்டேஷனில் முகத்தில் மாஸ் அணிந்து வெளியூர் செல்வதுபோல் கலர் உடைகளில் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .