திருச்சி உறையூர், புத்தூர், அரசு மருத்துவமனை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்ட பல்வேறு மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இதுகுறித்து அந்தந்த காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார்
அரசு மருத்துவமனை முன்பு மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சந்தேகமான முறையில் சென்று கொண்டிருந்த 2 வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர் .
இதில் அவர்கள் தள்ளி சென்ற மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உறையூர் பகுதியைச் சேர்ந்த சபி வயது ( 45 ) அபுதாபி வயது (35 )ஆகிய 2 கொள்ளையர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 16 போலீசார் பறிமுதல் செய்தனர்