Skip to content
Home » கலைஞர் நூற்றாண்டு விழா…குறும்பட போட்டி அறிவிப்பு

கலைஞர் நூற்றாண்டு விழா…குறும்பட போட்டி அறிவிப்பு

தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழு, நூற்றாண்டு விழா நாயகன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களை போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.அந்த வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழுவின் சார்பில் குறும்படபோட்டி (Short film Competition) மற்றும் சுருள்படபோட்டி (Reels Competition) நடத்துவது தொடர்பான செய்தி வெளியீடு 31.10.2023 அன்று வெளியிடப்பட்டது. அச்செய்தி வெளியீட்டில் இப்போட்டிகளுக்கான விண்ணப்பங்களுடன் கூடிய குறும்படங்கள் மற்றும் சுருள்படங்களை 20.12.2023-க்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிர்வாக காரணங்களால் இப்போட்டிகளுக்கான கடைசி தேதி 15.01.2024 வரை நீட்டிக்கப்பட்டது.

#kalaignar98 ‘நவீன தமிழகத்தின் தந்தை’ உதயநிதியின் உணர்ச்சிமிகு பதிவு!

இப்போட்டிகளுக்காக பெறப்படும் சுருள்படங்கள் மற்றும் குறும்படங்களை தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் குழுவால் இறுதிசெய்யப்பட உள்ளதால் இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏற்கனவே வெளியிப்பட்டுள்ள (செய்தி வெளியீடு (Press release) எண்.2179, நாள்:31.10.2023)வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறும்படங்களை (Short films) shortfilmkalaignar100@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கும் மற்றும் சுருள்படங்களை reelskalaignar100@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் 15.01.2024 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்  கொள்ளப்படுகிறது.குறும்பட போட்டிShort film Competition) மற்றும் சுருள்பட போட்டிகளுக்கான (Reels Competition) வழிகாட்டி நெறிமுறைகள் https://dipr.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!