புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் முற்போக்கு ஜனநாயக பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.