இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட் இன்று தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப்டவுனில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. இதில் இந்திய வீரர்களின் பந்து வீச்சில் தென் ஆப்ரிக்கா சிதறியது. 23.2 ஓவரில் தென் ஆப்ரிக்கா 55 ரன்களில் ஆட்டம் இழந்தது. வெர்ரைன் 15, டேவின் 12 ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்தனர். ஜான்சன் டக் அவுட் ஆனார். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் தான் ரன் எடுத்தனர்.
மதிய உணவு இடைவேளகை்கு பின்னர் இந்தியா பேட்டிங் தொடங்குகிறது. ஏற்கனவே நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்திய வீரர்கள் , தென் ஆப்ரிக்காவின் விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இந்திய வீரர் முகமது சிராஜ் 15ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். டெஸ்ட் போட்டியில் இதுவே சிராஜின் சாதனையாகும். பும்ரா, முகேஷ்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.