பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 27ம் தேதி நாகையில் பாதயாத்திரை நடத்தினார். அப்போது பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்ட நாகை வெளிப்பாளையம் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன் இருவரும் எஸ்.ஐ. சீருடையுடன் பாஜகவில் சேர மிஸ்டு கால் கொடுத்து அந்த கட்சியில்
இணைந்தனர். இது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. இது குறித்து இருவருக்கும், மாவட்ட எஸ்.பி. ஹர்ஷ் சிங் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டார். பின்னா் அவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து தஞ்சை டிஐஜி ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.