புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் 12வது ரோட்ராக்ட் நிர்வாகிகள்
பதவியேற்பு நடந்தது.கல்லூரி வளாகத்தில் நடந்தது. புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மகாராணி ரோட்டரி சங்க தலைவர் கருணைச்செல்வி ரவிக்குமார் தலைமை வகித்தார்.
தேவி கன்ஸ்ட்ரக்சன் ரோட்டேரியன் பொறியாளர் என்.கனகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி சேர்மன் ஆர்ஏ.குமாரசாமி, பொருளாளர் கவிஞர்
ஆர்எம்.கதிரேசன், செயலாளர் பி.கருப்பையா,முதல்வர் எம்.இளங்கோவன், முனைவர் திருவள்ளுவன்,
பி.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஆரோக்கியசாமி, ரோட்டரி துணை ஆளுனர் கவிதா ராஜசேகரன் பங்கேற்றனர். ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகளாக ஏ.குணாளன்,எம்.உமாமகேஸ்வரி,எஸ்.தர்ஷினி பொறுப்பேற்று கொண்டனர்.நிறைவாக சங்க செயலாளர் சுகன்யா முரளீதரன்
நன்றி கூறினார்.