சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் இன்று காலமானார். அவருக்கு வயது 70.உடல்நலக்குறைவு காரணமாக அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவர் 2016ல் எம்.எல்ஏவாக இருந்தார். பின்னர் அவர் பாஜகவுக்கு கட்சி தாவினார். அதன் பிறகு 2022ல் மீண்டும் திமுகவுக்கு வந்தார். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பணியாற்றி வந்தார். சில காலம் இவர் அதிமுகவிலும் இருந்தார்.