தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள், அலுவலகம், நிறுவனத்தின் உரிமையாளர் வீடுகளில் வருமானவரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இன்று 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, நாமக்கல், கோவை, ஈரோடு, உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள எலன் இண்டஸ்ட்ரி உரிமையாளர் விக்னேஷ் என்பவர் வீட்டில் 2வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. எலன் இன்டஸ்ட் நிறுவனமானது மோட்டார் பம்ப் தயாரிக்கும் நிறுவனம் ஆகும்.
எலன் இண்டஸ்ட்ரி நிறுவனர் விக்னேஷ் என்பவர் SIMA அமைப்பில் தலைவராக உள்ளார். வரி ஏய்ப்பு செய்யப்பட்டதால் இந்த வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதே போல கோவை காளப்பட்டி அருகே கிரீன் பீல்ட் ஹவுசிங் என்ற கட்டுமான நிறுவனத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
கிரீன் பீல்ட் ஹவுசிங் நிறுவனத்துக்கு சொந்தமான கருமத்தம்பட்டி மற்றும் கோவில்பாளையம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வீடு கட்டுமானத்துக்காக பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி இருப்பதாகவும் அதில் வரி ஏய்ப்பு செய்ததாக இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கிரீன் பீல்ட் ஹவுசிங் நிறுவனத்திலிருந்து ஊழியர் ஒருவரை வங்கிக்கு அழைத்துக் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரர், சத்தியமூர்த்தியின் வீடு மற்றும் அலுவலக இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடந்து வருகிறது. கோவை காளப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான அலுவலகத்தில்வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும்தொடர்ந்து சோதனை நடக்க வாய்ப்பு உள்ளதால் சோதனை நிறைவடைந்த பின்னரே இதுகுறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று வருமான வரி புலனாய்வு புரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.