பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் இன்று பாஜகவினர் திரண்டு உள்ளனர். இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி 40வது வார்டு, திருவெறும்பூர் பகவதி புரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் , மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பைகளை பாஜகவினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி
இந்த நாட்டை உலகினுடைய முதல் நிலை நாடாக உயர்த்தும் பணியில் பத்தாவது ஆண்டாக சிறப்பாக செயல்பட்டு வருவருடன் இன்றைய தினம் தமிழகத்தில் திருச்சியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கான திட்டங்களை தமிழகத்திற்கு கொடுக்கக் கூடிய வகையில் வருகிறார்.
திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது நிலையம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது மேலும் சாலை திட்டங்கள், ஆயுள் கார்ப்பரேஷன் திட்டங்கள் ஆகியவற்றை மக்களுக்காக அர்ப்பணிக்கிறார். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் பொழுது அந்தந்த பகுதி குதூகலிக்கிறது. இந்தியாவை உலகின் முதல் நாடாக உயர்த்தும் பணியில் மோடி 10வது ஆண்டாக சிறப்பாக செயல்படுகிறார்.
இந்தியாவிற்கு மட்டுமல்லாது தமிழ் கூறும் நல்லுலகம் எங்கெல்லாம் இருக்கிறதோ உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு திருச்சியை மையமாக கொண்டு அவர்களது பணி பயணத்தை அமைக்க முடியும் என்பதை உருவாக்கி கொடுத்துள்ள பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
அவரது திட்டங்களில் மிக உன் உன்னதமானதும் மேன்மையானதும் திட்டமான தூய்மை இந்தியா திட்டம். அண்ணல் காந்தியின் அடிப்படைக் கொள்கை தான், நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது, நம்மை நாமே சுத்தமாக வைத்துக் கொள்வது, நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது நமது கடமையாகும்
இன்று பிரதமர் தமிழகம் வருவதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் அந்தந்த பகுதி மக்களுடன் சேர்ந்து தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒரு கட்சிக்காகவோ மனிதனுக்காகவோ ஏற்படுத்தக் கூடியது அல்ல. நாட்டிலுள்ள 140 கோடி மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் இதில் வெற்றி காண முடியும்.
அதன் ஒரு பகுதியாக தான் திருச்சி மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் பகவதிபுரத்தில் தற்பொழுது தூய்மை இந்தியா திட்டத்தை மேற்கொண்டோம். நாங்கள் முழுமையாக செய்து விட்டோம் என்று சொல்ல முடியாது.ஒரு பகுதியை தான் செய்துள்ளோம் .
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.